2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பன்விலவில் முகமூடித்தாக்குதல்: ஐவர் காயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, மடுல்கலை அபிராமி தமிழ் வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக நின்றுக்கொண்டிருந்தவர்கள் மீது முகமூடியணிந்திருந்தவர்கள் பொல்லுகளினால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர் காயமடைந்துள்ளதுடன் மேலும் நான்கு பெண்களும் காயமடைந்துள்ளனர்.

வாகனத்தில் சென்றவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதுடன் அங்கிருந்த லயமொன்றின் கூரைக்கும் கற்களால் தாக்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளரான சிவலிங்கம் பன்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறு காயங்களுக்கு உள்ளான பெண்கள் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .