2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இ.தொ.கா.வின் வெற்றியில் பெண்களுக்கும் பங்குண்டு: ஜெரினா

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மண்ணில் இ.தொ.கா வின் ஆட்சியே மலர வேண்டும் என்ற செய்தியை எதிர்பார்த்திருந்த மலையக  பெருந்தோட்டத்துறை பெண்கள் தமது வாக்குரிமை மூலம் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர் என இ.தொ.கா மாதர் அணியின் பொறுப்பாளர் செல்வி ஜெரினா ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கொழும்பிலுள்ள சௌமிய பவனில் நடைபெற்ற மகளிர் இணைப்பதிகாரிகளின் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மத்திய மாகாணத்தில் வாழும் அனைத்து பெருந்தோட்டத்துறை பெண்கள் சரியான நேரத்தில், சரியான ஆணையை இ.தொ.கா வுக்கு வழங்கியுள்ளனர். மத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது இ.தொ.கா கட்டுக்கோப்பான ஒன்றிணைந்த பலத்தையும், மாகாணசபையில் பேரம் பேசும் சக்தியையும் பெற்றுத் தாருங்கள் என்று மக்களிடம் கேட்டு இருந்தோம். ஆனால் அதையும் தாண்டி அதற்கு மேலாக மக்கள் ஆணையைத் தந்துள்ளனர். அதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைவதுடன், இந்த மகிழ்ச்சியில் சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாண தமிழ் மக்களும் இதில் இணைந்து கொள்கின்றனர்.

பெருந்தோட்டத்துறை பெண்கள் இ.தொ.கா வை தோட்டங்கள் தோறும் ஒரு வலுவான சக்தியாக வைத்திருக்கிறார்கள். இ.தொ.கா வில் இணைந்து கொண்ட பெண்கள் அரச பணிகளில் இந்த  சிறப்பான பதவிகளில் தம்மை உயர்த்தி வருகிறார்கள்.

பெண்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாகவும், சுயமரியாதையோடு கௌரவமாகவும், வாழ வேண்டும். இது மாத்திரமல்ல சமூக கலாசார அபிலாஷைகளை பெற்றுக் கொள்ளவும் விரும்புகிறார்கள்.

இதனை இ.தொ.கா நிச்சயம் நிறைவேற்றும். ஏற்ற வேளையில் அதனை உறுதி செய்யும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நுவரெலியாவுக்கு மாத்திரமன்றி முழுமலையகத்திற்கு தலைவர் என்ற நிலைப்பாடும் அவரது தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த ஜனநாயகத் தீர்ப்புக்கு இ.தொ.கா மதிப்பளிக்கின்றது. நன்றிகளைத் தெரிவிக்கின்றது.

ஒவ்வொரு தோட்டங்களில் இன்ற மஸ்தான் தம்பியின் உறவினர்கள் என்று சந்திகளில் கூச்சலிட்ட நங்கைகள் தனது கற்புக்கு களங்கம் நேர்ந்தாலும் கூட பொருட்படுத்தாது தம்பி எவ்வழியோ, அவ்வழியே நாம் என்ற குரல் கொடுக்கும் கலைமகளே நீயே அருள்புரிய வேண்டும்.

ஆறு கையேந்திகள் என கூறியவர்கள் களம் பல கண்ட இவர்களை இந்த மலையக மண் மகத்தான சாதனை படைக்க ஆறு பேராளிகளை பெற்றுத் தந்துள்ளது என்றால் மலையக பெண்களின் விடாமுயற்சியும், உறுதிப்பாடுமே இதற்கு காரணமாகும்.

இத்தோடு நின்று விடாது ஒன்றாக இணைந்து ஓரணியில் பயணிப்பதே சிறந்தது. எதிர்காலம் சுபீட்சமடைய பெண்களுக்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை இ.தொ.கா முன்வைக்க இருக்கின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .