2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஐ.தே.க வினரின் உண்ணாவிரதம் நிறைவு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் இருவரின் உண்ணாவிரத போராட்டம் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இருவரும் இன்று காலை 8.30 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். மாகாண சபை உறுப்பினர் சுசந்த கொடித்துவக்குவின் கோரிக்கையை அடுத்தே இந்த உண்ணாவிரத போராட்டம் முற்பகல் 11.15 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கோரியே இந்த உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வர்த்தகர்கள் இருவரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0

  • VALLARASU.COM Thursday, 26 September 2013 02:52 PM

    ஐதேக தலைவர் ரணில், முக தலைவர் ஹக்கீம், இருவரும் கட்சியும், மக்களும் அழிந்தாலும் தலைமைத்துவத்தை விட்டு கொடுக்க மாட்டினம். சாவு வீடு என்றால் அவர்கள்தான் பிணமாக இருக்க வேண்டும், கல்யாண வீடு என்றால் அவர்கள்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்..!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .