2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மகாவலி கங்கையில் மூழ்கிய இருவரை காணவில்லை

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 30 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மகாவலி கங்கையில் அடித்துச்செல்லப்பட்டு நீரில் மூழ்கிய மாணவர்கள் இருவரை காணவில்லை என்றும் அவ்விருவரையும் தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியாவ கலைமகள் வித்தியாலத்தில் ஆண்டு 10 இல் கல்வி பயிலும் திலீபன்(15), ஆண்டு 11 இல் கல்வி பயிலும் கோகுலன்(16) என்ற இரு மாணவர்களே கங்கையில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இம் மாணவர்கள் இன்று மாலை     கோவில் பூசாரியுடன் கருமகாரியத்திற்கு உதவிக்காக மஹாவலி ஆற்றுக்குச் சென்றுள்ளனர்.

கருமத்தில் ஈடுபட்டிருந்த போது கங்கை நீரின் வேகம் அதிகரித்ததால் அவ்விருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

அவ்விருவரையும் தேடும் பணிகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த கட்டுகஸ்தோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .