2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'பிந்து' காண்பித்தவர் கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 30 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி ஹதரலியத்த பிரதேசத்தில் 'பிந்து' என்ற சிங்கள திரைப்படத்ததை எவ்வித அனுமதியும் இன்றி மக்களிடம் பணம் அறவிட்டு காண்பித்த ஒருவரை ஹதரலியத்த பொலிஸார சந்தேகத்தின் பேரில் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

ஹதரலியத்த பிரதேசத்தின் பொது அமைப்பு ஒன்றிற்கு பண உதவிக்காக 'பிந்து' என்ற இத் திரைப்படம் காண்பிக்கப்படுவதாக தமக்கு கிடைத்த தகவல்களையடுத்து அவ்விடத்தை முற்றிகையிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திரைப்படத்தை காண்பிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ப்ரொஜெக்டர், டீ.வீ.டீ.பிளேயர் உட்பட உபகரணங்களும் மக்களுக்கு விற்பனை செய்துகொண்டிருந்த அனுமதிப்பத்திரத்தையும் தாம் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிங்கள் திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்கா இயக்கிய இத் திரைப்படத்தை ரேனுகா பாலசூரிய தயாரித்துள்ளதுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இத் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் நாளை ஆஜர் படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .