2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறுமியின் சடலம் நல்லடக்கம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா, மாகாஸ்தோட்ட கீழ் பிரிவில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் இறுதி கிரியைகள் இன்று காலை தோட்ட மயானத்தில் இடம்பெற்றது.

மேற்படி தோட்டத்தில் பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிவேதா (வயது 7) என்ற சிறுமி கடந்த வியாழக்கிழமை திடீரென காணாமல் போனார். இதுதொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த சிறுமியின் சடலம் கடந்த சினிக்கிழமை மேற்படி பிரதேசத்தின் தேயிலை காட்டுகருகில் உள்ள நீரோடையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படவில்லை என்றும் மரணத்திற்கான காரணத்தை கண்டறியமுடியாமையின் காரணமாக சிறுமியின் உடற்கூறுகளை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி இரசாயன பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை பெறுமாறு சட்ட வைத்திய அதிகாரி சமன்த விஜேரத்ன உத்தரவிட்டார்.

தொடர்ந்து நேற்று மாலை சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் இறுதிக்கிரியைகள் பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் இன்று காலை 11.30 மணிக்கு தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாகாஸ்தோட்ட கீழ் பிரிவு மேல்பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்ந்த பொதுமக்கள், பீட்று லவர்சிலிப் தோட்ட மக்கள் அனைவரும் தமது பணிகளை புறக்கணித்து சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தோட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .