2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சவப்பெட்டியுடன் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 02 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சி.எம்.ரிஜபாத்

சவப்பெட்டி மலர் வளையம் என்பவற்றை ஏந்தி ஊர்வலமாக வந்து பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி நகரில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.

இவ் ஆர்ப்பாட்டம் இன்று (02) புதன்கிழமை மாலை 4.00 மணிமுதல் 5.30 மணிவரை கண்டி மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாகவுள்ள சுற்றுவட்டத்தில் இடம் பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றினர். இவர்களுடன் பிக்கு மாணவர்களும் பங்கு கொண்டனர்.

இவர்கள் அரசாங்கம் கல்வியை அழிக்கின்றது என்ற தலைப்பில் இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் இவர்கள் சவப்பெட்டி ஒன்றினை வெள்ளைத்துணியில் மூடி அதன்மேல் மனித தலை போன்று தலை ஒன்றினை வைத்து  மலர் வளையங்களுடன் கல்வி செத்துவிட்டது என்ற வாசகங்களுடன் கண்டி மணிக்கூட்டு கோபுரத்தை  நோக்கி வந்தனர்.

சவப்பெட்டி மீதிருந்த வெள்ளைத்துணியில் சுகாதாரம் மற்றும் இலவசக்கல்வி 6 வருடங்களாக சவப்பெட்டியினுள் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

அரசாங்கம் கல்விக்கு இழைக்கும் அநீதிகளை குறிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியும் வந்த இம் மாணவ மாணவியர்கள் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பான சுற்றுவட்ட பாதையில் அமர்ந்து கொண்டனர்.

இதனால் கண்டி நகர் ஊடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. எனினும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் போக்குவரத்திற்கு மாற்றுப் பாதைகளை ஏற்படுத்தி கொடுத்தனர்.

இம் மாணவர்கள் இவ்வாறு பாதைகளில் அமர்ந்து கொண்டதன் பின்னர் அனைத்து பல்கலைக்கழக மாணவர்பேரவை மாணவர்கள் சிலர் அரசினால் மாணவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் குறித்து உரையாற்றினர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .