2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: தந்தையும் நண்பனும் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 03 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரையும் சிறுமியின் தந்தையையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கந்தப்பளை தேயிலைமலை தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது அதே தோட்டத்தைச்சேர்ந்த 36 வயதான ஒருவரையே கந்தப்பளை பொலிசார் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

கந்தப்பளை தேயிலைமலை தோட்டத்தை சேர்ந்த ஏழு வயதான சிறுமியொருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின்  தாயார் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ள நிலையில் சிறுமியின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ள நபரும் வீட்டில் ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதன்போதே தந்தைக்கு தெரியாமல் குறித்த நபர் சிறுமியை துஷ்;பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது மகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதை அறிந்துகொண்ட தந்தை மகளை தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கொண்டு சென்று அங்கு தங்கவைத்துள்ளார்.

உறவினர் வீட்டில் வைத்து சிறுமி வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்போதே சிறுமி விடயத்தை கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து  பொலிஸார் சிறுமியின் தந்தையை கைதுசெய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேட ஆரம்பித்துள்ளனர்.

தன்னை பொலிசார் தேடுவதை அறிந்த சந்தேகநபர் விசமருந்திய நிலையில் பொலிஸில் இன்று சரணடைந்துள்ளார். இதனையடுத்து இருவரையும்  விசாரணைக்கு உட்படுத்திவருவதாக தெரிவித்த பொலிஸார் இருவரையும் நீதின்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .