2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பரீட்சையில் புள்ளி குறைந்தமையால் மகனை தீயினால் சுட்ட தந்தை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 05 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் குறைந்த புள்ளியை பெற்ற தனது மகனை தீயினால் சுட்ட தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவை கீழ் பிரிவு தோட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 95 புள்ளிகளை பெற்றதன் காரணமாக புள்ளிகள் பற்றாது எனகூறியே தனது 10வயது மகனை அவரது தந்தை தீயினால் சூடு வைத்துள்ளார்.
 
பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவனின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவனுக்கு கழுத்துப்பகுதியிலும் வலது காலிலும் எரி காயங்களுடன் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .