2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீராடிய இருவரின் சடலங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கிஷாந்தன்   

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிலுள்ள மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர்கள்  இருவரும் நேற்று சனிக்கிழமை  சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

இளைஞர்கள் சிலருடன்; மேற்படி இளைஞர்கள் இருவரும் குளித்துக்கொண்டிருந்தபோதே நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

பிரவுண்ஸ்வீக் தோட்டத்தைச் சேர்ந்த தனேஸ் பாலன் (வயது 21),  தயாசீலன் (வயது 18) ஆகிய இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .