2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மஹாவலி கங்கையில் நீராடிய மாணவன் பலி

Super User   / 2013 நவம்பர் 25 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம்.ரம்ஸீன்

கெலிஓயா கலுகமுவ பகுதியில் மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற மாணவனொருவன் நீரில் மூழ்கி இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 1 மணியளவில் குறித்த மாணவன் தனது நண்பர்களுடன் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் 16 வயதுடைய எம்.எஸ்.எம்.மனாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .