2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கம்பளையில் விடுதி முற்றுகை; சந்தேகத்தில் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 26 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம். ரம்ஸீன்

கம்பளை நகரில் இயங்கிவந்த விடுதியொன்றை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுள்ள  கம்பளைப் பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் ஆண்கள் இருவரையும் பெண்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

விபசார நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் மொனராகலையையும் மற்றையவர் உடவலவ்வ பகுதியைச் சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை மாவட்ட நீதவான் முன்னிலையில் சந்தேக நபர்களை  ஆஜர்படுத்தியபோது,  ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் சந்தேக நபர்களை விடுவித்துள்ளார். அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நீதவான்  ஒத்திவைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .