2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தின்  தமிழ்க்கல்வி தொடர்பில் நேற்று சனிக்கிழமை கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

மத்திய மாகாணசபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களுக்கும்  இடையிலேயே  இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

மத்திய மாகாணத்தின்  தமிழ்ப் பாடசாலைகளில்  கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுடன், தமிழ்ப் பாடசாலைகளில் அதிபர்கள் சிலர் அரசியல் ரீதியாக செயற்படுவதால் பாடசாலையின் கல்வி அபிவிருத்தியில் பாதிப்பு ஏற்படுவதாகவும் மத்திய மாகாணசபையின் முதலமைச்சரின் கவனத்துக்கு இதன்போது கொண்டுவரப்பட்டது.

இது  தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மாகாண முதலமைச்சர் தம்மிடம் உறுதியளித்தாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில்  மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங்.பொன்னையா, சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு ஆகியோர் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .