2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியா மாநகர சபையின் கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நுவரெலியா மாநகர சபையின் மாதாந்த கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டள்ளது. பிரதி மேயரின் வருகையினை அடுத்தே சபை கூட்டம் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 10.35 மணிக்கு மாநகர சபை கேட்போர்கூட மண்டபத்தில் மேயர் மஹிந்த தொடம்பே கமகே தலைமையில் நடைபெற்றது.இதன்போது சபைக்கு அமர்வில் கலந்துகொள்வதற்காக பிரதி மேயர் திஸ்ஸ செனவிரத்ன வருகை தந்திருந்தார். குறித்த சந்தர்ப்பத்தில் சபையின் ஆளும் கட்சி வரிசையில் ஒன்பது ஆசனங்கள்; மாத்திரமே காணப்பட்டன.

இன்றை கூட்டத்திற்கு பிரதி முதல்வருக்கு அழைப்புவிடக்கப்படாத போதிலும் அவர் சபைக்கு வருகை தந்திருந்தார். இதன் காரணமாக சபையில் ஆளுங் கட்சி தரப்பில் ஒரு ஆசனம் குறைவாகவே காணப்பட்டது.இதன்போது ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் குமார தேசப்பிரியவும் வருகை தந்தார். இவர் அமர்வதற்கான ஆசனம் இல்லாமை காரணமாக சபையை ஒத்திவைக்குமாறு மேயரிடம் வேண்டுகோள்விடுத்தார்.

இதனை உறுப்பினர் மொகமட் பலீல் வழிமொழிந்ததை தொடர்ந்து சபையை காலவரையரையின்றி ஒத்திவைப்பதாக மேயர் அறிவித்தார். இதன் அடிப்படையில் நுவரெலியா மாநகர சபையின் டிசம்பர் மாத கூட்டம் சபை ஆரம்பித்து ஜந்து நிமிடங்களில் நிறைவுபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .