2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கோயில் உடைப்பு; இராதாகிருஸ்ணன் பிரதமருக்கு கடிதம்

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

கோயில்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்பாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் பிரதமர் தி.மு.ஜயரத்னவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"கடந்த சில நாட்களாக இரத்தினபுரி, தெனியாய, யாழ்ப்பாணம்; போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக கோயில்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதோடு சிலைகளும் உடைத்தெரியப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.

இந்த செயலானது மலையகத்தில் தொடருமானால் இன ரீதியான முறுகல் நிலையொன்றை உருவாக்கும். எனவே சமய விவகாரங்களுக்கு பொறுப்பானவர் என்ற வகையிலும் இந்த நாட்டின் பிரதமர் என்ற வகையிலும் உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இதேபோன்று கடந்த காலங்களில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டு இதற்கு எதிராக முஸ்லிம்கள் வீதியில் இறங்கி பேராட்டம் நடத்தியதை தாங்கள் நன்கு அறிவீர்கள். தொடர்ச்சியாக சிறுபான்மை சமூகங்கள் மீதும் அவர்களுடைய மத நடவடிக்கைகளிளும் இவ்வாறான தேவையற்ற செயல்கள் நடைபெறுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனை ஒரு சில குழுக்கள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்து வருவதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதோடு இந்த குழுக்களை இனத் கண்டு அவர்களை நீதிக்கு முன் நிறுத்தி உரிய தண்டனைகளை பெற்று கொடுக்காத பட்சத்தில் இலங்கையில் வாழும் சிறுபான்மையினர் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஒவ்வொறு சமூகத்திற்கும் அவர்களையுடைய மதமும் கலாசாரமும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இதற்கு ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அந்த சமூகத்தினர் மற்ற சமூகங்களுடன் முரண்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இதனை நாம் கடந்த 30 வருட கால யுத்தத்தில் கண்கூடாக கண்டுள்ளோம். தற்போது இலங்கையில் படிப்படியாக இப்படியான இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்பட்டு வருவதை விரும்பாத ஒரு சில  தீண்டத்தகாத சக்திகளே இவ்வாறான மிலேச்சத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

எனவே இவர்களை இனம் கண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் கடமையாகும்.இது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வீர்களென எதிர்ப்பார்க்கின்றேன்".

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .