2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மகப்பேறு நிபுணருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்
 
டிக்கோயா வைத்தியசாலையில் தற்போது பணியாற்றும் விசேட மகப்பேறு நிபுணர் வேண்டாம் என்று இன்று வெள்ளிக்கிழமை வைத்தியசாலையின் முன் பொது மக்களும், டிக்கோயா வைத்தியசாலையின் ஊழியர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள். தற்போது பணியாற்றும் விசேட மகற்பேறு நிபுணர் இந்த வைத்தியசாலைக்கு வேண்டாம், இவரால் கர்ப்பிணி தாய்மார்களும் சிசுகளும் மரணமடைவது அதிகமாகின்றது என்று வைத்தியருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 
 
இந்த வைத்தியர் கடமையில் இருந்தால் தீ குளிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் தெரிவித்தார். குறித்த வைத்தியர் இரண்டு வருடகாலமாக கடமையில் இருந்தும் நோயாளிகள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். பரிசோதனையை மேற்கொள்வதற்கு காலையில் வந்தால் மாலை தான் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கின்றது என பொதுமக்கள் சுட்டிக்காட்டிகின்றனர். குறித்த வைத்தியசாலைக்கு இரு விசேட மகற்பேறு நிபுணர்கள் வேண்டும். அத்தோடு இவ் வைத்தியசாலையில் மற்றுமொரு விசேட மகற்பேறு நிபுணர் இருந்தாலும் அவர்க்கு கடமையில் ஈடுப்படுவதற்கு தற்போது கடமையில் இருக்கும் வைத்தியர் இடமளிப்பதில்லை என மக்கள் மேலும் சுட்டிக்காட்டிகின்றனர். 
 
குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர் தர்சித்த ஜயசேகரவிடம் நாம் விசாரித்த போது அவர் தெரிவிக்கையில், இந்த வைத்தியசாலையில் இரு விசேட மகற்பேறு நிபுணர்கள் சேவையில் ஈடுப்படுவதற்கு இடவசதிகள் இல்லை. ஆகையால் மற்றுமொரு வைத்தியர் தேவையில்லை என விளக்கமளித்தார். 
 
குறித்த வைத்தியசாலையில் மற்றுமொரு விசேட மகப்பேறு நிபுணர் இருந்தும் சேவையில் ஈடுப்பட இடமளிக்காத வைத்தியர் ஜானக ஜயசிங்கவிடம் நாம் விசாரித்தபோது அவர் தெரிவிக்கையில் இந்த வைத்தியசாலையில் இரு விசேட மகற்பேறு நிபுணர்கள் கட்டாயமாக தேவை. ஒருவரால் மட்டும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாது. அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பெறுவதற்கு வருகின்றார்கள். அவர்களை ஒருவரால் மட்டும் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது. இதனால் கட்டாயமாக இரு வைத்தியர்கள் மட்டுமில்லாமல் சில விசேட மகற்பேறு நிபுணர்கள் தேவையென விளக்கமளித்தார். 
 
எனினும் தற்போது கடமையில் இருக்கும் வைத்தியர் வெளியேற வேண்டும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X