Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Sudharshini / 2015 மே 04 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. இராமசந்திரன்
தோட்டத் தொழிலாளர்களுக்கென இலவசமாக வீடுகளை அமைத்து, அதில் அவர்களை குடியேற்றுவதற்காக உண்மையாக செயற்பட்டால், எமது ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும். ஆனால், அடிக்கல் நாட்டுவதுக்கு நூறு நாட்களும் அதை கட்டி முடிப்பதற்கு நான்கு மாதங்களும் என மக்கள் காதுகளில் பூ சுற்றுவதற்கு ஒத்துழைக்க முடியாது.
நூறு நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என முன்னர் கூறப்பட்டதனால் வீடு கட்டுவதற்கு காலம் போதாது என கூறி தப்பிவிட எடுத்த முயற்சிகள் தற்போது பயனளிக்கவில்லை. எனவே வேறு காரணங்களை கூறி தப்பிக்க முயற்சிக்கின்றனர்
என மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் பெருந்தோட்டங்களை உருவாக்கியவர்கள் எமது முன்னோர்கள். அதனால் தொடர்ந்தும் எமது சந்ததியினர் இந்த பெருந்தோட்டங்களில் கூலி தொழிலாளர்களாக வேலைசெய்வதை விடுத்து, எம்மால் உருவாக்கப்பட்ட தேயிலை, இறப்பர் தோட்டங்களுக்கு உரிமையாளர்களாக முனைவது சிலருக்கு நகைச்சுவையாக தோன்றுகின்றது.
எமது சமூகத்தை நாடற்றவர் என்ற நிலையிலிருந்து விடுவித்திருக்கிறோம். கல்விகற்ற சமூகமாக உருவாக்கியிருக்கிறோம். லயன் வாழக்கை முறையை மாற்றிவருகிறோம். எமது முன்னோரின் உழைப்பால் உருவாக்கிய தோட்டங்களின் உரிமையாளராக எமது சமூகத்தை உருவாக்குவதுதான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடுத்த இலக்காகும.;
மஹிந்த ராஜபக்ஷ தற்போது ஜனாதிபதியும் இல்லை. கோத்தபதய தற்போது பாதுகாப்பு செயலாளரும் இல்லை. இந்நிலையில், கடந்த அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைகளை தற்போதை அரசாங்கம் முன்னெடுக்க முடியாமல்; திணறிக்கொண்டிருக்கிறது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அன்று மந்திரி பதவிக்காக அலரி மாளிகைக்கு காவடி தூக்கியவர்கள், மஹிந்தவை அழைத்து வந்து தேர்தல் பிரசாரம் செய்து கொண்டவர்கள், இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவையும் அழைத்து வருவதை பெருமையாக செல்லிக்கொள்வதை பார்த்து எவரும் ஆச்சரியப்பட மாட்டார்கள். இது நத்திப்பிழைக்கும் பாரம்பரியம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு நாட்டில் ஜனநாயகம் வலுப்பெற, ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன எடுத்த முயற்சி மிக சிறந்த நடவடிக்கைதான். ஆனால், 18ஆம் அரசியல் திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள பிரதி அமைச்சர் பதவியை வாங்கிக்கொண்டு, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பாரளுமன்றத்தில் வாக்களித்தது யார் என்பதை பிரதி அமைச்சை பெற்றுக்கொண்டவர்கள் மறந்து விட்டாலும் மக்கள் மறந்துவிடவில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியால் வந்த 4,000; இந்திய வீடமைப்பு திட்டத்தை ஏன் இன்னும் நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் வரவு-செலவு திட்டத்தின் மூலம் தோட்டங்களுக்கு 50,000 வீடுகள் கட்டுவதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இத் திட்டத்திற்கு புதிய அரசாங்கத்திடம் நிதியைப் பெற்று அதை நடைமுறைப்படுத்த முடியவில்லையா.
இவ்வாண்டு தோட்ட வீடமைப்புக்கொன இடைக்கால வரவு செலவு திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தோட்டங்களில் தொழிலாளர் குடும்பங்களின் லயன் வாழ்கையை முடிவிற்கு கொண்டுவர டிவிசனுக்கு ஐந்து வீடுகளுக்கு அடிக்கல் நாட்டுவதால் சாத்தியமாகுமா? இதனால் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய வீடமைப்பு திட்டத்திலும், முன்னய அரசாங்கம் வழங்கிய 50,000 வீடமைப்பு திட்டத்திலும் முழுமையாக லயன்களை அப்புறப்படுத்திவிட்டு வீடமைப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தோட்டங்களில் உள்ள முழு தொழிலாளர் குடும்பங்களுக்கும் புதிய வீடுகளை அமைத்து கொடுக்கும் திட்டத்தை கொள்கையாக கொண்டிருந்தது.
புதிய அரசாங்கத்தின் அதிகாரத்தில் உள்ள அமைச்சர்கள் கடந்த நான்கு மாத காலத்தில் மலையக மக்களுக்கு செய்த சேவைகளை, சாதனைகளை பட்டியல்படுத்தி காட்டிவிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவைகளுடன் ஒப்பிட்டு பேச முற்பட வேண்டும். இடைக்கால வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட தனியார் துறை ஊழியர்களுக்கான 2,500 ரூபாய் சம்பள உயர்வு ஏன் தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் அபிலாஷைகளை வெண்றெடுக்க தூரநோக்கோடு கடந்த 75 வருடங்களாக செயற்பட்டு வருகின்றது. இதில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளது. காலத்தை கடத்திவிட்டோம் என்பதற்காக சிலர் விழா எடுக்கலாம். ஆனால், சாதனை படைத்துவிட்டு விழா எடுப்பதுதான் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பழக்கமாகும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசியல் உரிமைகளையும் அடிப்படை தேவைகளையும் பெற்றுக்கொடுத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதையும் இ.தொ.கா. மலையகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் மே தினத்தில் மக்கள் வெள்ளம் அமைந்திருந்தது. இது சில மலையக அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை எற்படுத்தியிருந்தது என்பதில் எவ்வித ஆச்சரியமும் கிடையாது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
1 hours ago