2025 ஜூலை 09, புதன்கிழமை

சட்டவிரோத வர்த்தக நிலையங்களினால் சுற்றுலா பயணிகள் சிரமம்

Gavitha   / 2015 மே 06 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப்பயணிகளின் வருகையை தொடர்ந்து, மிருகக்காட்சிசாலையை அண்டிய பகுதிகளில் அனுமதியற்ற வர்த்தக நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இது சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமன்றி, சுற்றாடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமென்று சுற்றுலாப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச தரத்துக்கேற்ப நிர்மாணிக்கப்படவுள்ள பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலை, 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மிருகக்காட்சிசாலை அமைந்துள்ள கேகாலை, ரம்புக்கனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் 150க்கும் மேற்பட்ட அனுமதியற்ற வர்த்தக நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றன.

மிருகக்காட்சிசாலையை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .