2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பாதசாரிகள் கடவையில் சென்ற மாணவிகள் விபத்தில் படுகாயம்

Gavitha   / 2015 மே 09 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

கொட்டகலை நகரில் சனிக்கிழமை (09) இடம்பெற்ற விபத்தில் 13 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவிகள் படுகாயமடைந்த மாணவிகள் நிலையில் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை நகரில் கொட்டகலை தமிழ் மகாவித்தியாலயத்துக்கு  முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் சென்று கொண்டிருந்த குறித்த இரு மாணவிகள் மீதும் வேன் ஒன்று மோதியுள்ளது.

ஹட்டனிலிருந்து தலவாக்கலையை நோக்கி வேகமாக சென்ற வேனே இவ்வாறு மாணவிகள் மீது மோதியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த மாணவிகள் முதலில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

படுங்காயமடைந்த இரண்டு மாணவிகளும் கொட்டகலை தமிழ் மகாவித்தியாலயத்தில் 7ஆம் வகுப்பில் கல்வி கற்கின்றார்கள் என்றும் இந்த விபத்தை ஏற்படுத்திய சாரதியை கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .