2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மே 31 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

கேகாலை, கலிகமுவ வல்கம வித்தியாலயம், மொரகொட மற்றும் புலத்கோபிட்டிய போபிட்டிய ஆகிய மூன்று பாடசாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் மற்றும் விஞ்ஞான ஆய்வுக்கூடங்களை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் ஆகியோர் வெள்ளிக்கிழமை (29) திறந்து வைத்தனர்.

தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் விஞ்ஞான ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு ஒரு பாடசாலைக்கு தலா 150 இலட்சம் ரூபாய் வீதம் மூன்று பாடசாலைகளுக்கும் 450 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, மாவனெல்ல, கேகாலை ஆகிய மூன்று கல்வி வலயங்களுக்குட்பட்ட 57 தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் விஞ்ஞான ஆய்வுக்கூடம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .