Gavitha / 2015 ஜூன் 10 , மு.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கவிதா சுப்ரமணியம்
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பரிவு ஆரம்பிக்கவேண்டுமாயின், அதற்கு உரிய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவேண்டும் என்றும் அதற்கு சிறிது காலம் தேவை என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், நேற்று செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி, பெற்றோரால் ஆர்ப்பாட்டம் முன்;னெடுக்கப்பட்டதையடுத்து அதற்கு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என கல்வி இராஜாங்க அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஏற்கனவே ஆரம்பப்பிரிவு இருந்தது.
மாணவர்கள் திடீரென புதியதொரு சமூகத்துக்கு சென்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிறியதொரு காலத்துக்கு சிரமமானதாகவே இருக்கும்.
இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு சிறிது காலம் எடுக்குமாக இருந்தாலும் பாடசாலைகளில் பெற்றோர் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் நிலவும் பிரச்சினைகள் எப்படியாயினும் தீர்த்து வைக்கப்படும்.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்' என்றார்.
8 minute ago
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
2 hours ago