Menaka Mookandi / 2015 ஜூன் 21 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் நடாத்தப்படவுள்ள இராணுவ வீரர்கள் நினைவு தினம் எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு இரத்தினபுரி புதிய நகரில் அமைக்கப்பட்டுள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவுச் சிலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளையும் சப்ரகமுவ மாகாண சபை மற்றும் ரணவிரு அதிகார சபை என்பன மேற்கொண்டு வருகின்றது.
அன்றைய தினம் இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவுச் சிலை வளாகத்தில அமைக்கப்பட்டுள்ள சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் மறைந்த இரானுவ வீரர்களின் பெயர்கள் பொரிக்கப்பட்ட பெயர் பலகையும் திறந்து வைக்கப்படவுள்ளது.
மேற்படி நிகழ்வில் சர்வமத குருமார்கள், சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள் உட்பட மறைந்த இராணுவ வீரர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டு ரணவிரு ஞாபகார்த்த நினைவுச் சிலை வளாகத்தில் மறைந்த இராணுவ வீரர்களின் பெயர்கள் பொரிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.
8 minute ago
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
2 hours ago