2026 ஜனவரி 21, புதன்கிழமை

2021-2022 கல்வியாண்டுக்கான இந்திமொழி வகுப்புகள் ஆரம்பம்

Kogilavani   / 2021 மார்ச் 30 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

இலங்கைக்கான கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தால், 2021-2022 கல்வியாண்டுக்கான இலவச இந்திமொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பாரதிய கலா கேந்திரத்தில் நடத்தப்படும் இந்த வகுப்புகளில் இணைந்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்றும் ஆர்வமுள்ளவர்கள் புதிய வகுப்புகளுக்குப் பதிவுசெய்யதுகொள்ளலாம். 

இந்த வகுப்புகள் இலவசமாக நடத்தப்படவுள்ளதாகவும் ஆனால் பதிவு கட்டணம் மட்டும் ரூபாய் 1,700 செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்தி வகுப்புகள் இணையத்தளம் முறையில் நடத்தப்படும் என்றும் உள்ள10ர் அதிகாரிகள் அனுமதி அளித்தவுடன், கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் பாரதிய கலா கேந்திரத்தில் வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பப் படிவங்களை இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம், எண் 01/ஏ, மகாமாயா மாவத்தை, கண்டி என்ற முகரியில் வேலை நாட்களில்  (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 9.00 முதல் பி.ப 5.30 வரை பெற்றுக்கொள்ளலாம். அல்லது  https://www.ahcikandy.gov.in/adminpart/uploadpdf/Hindi_class_for_the_AY_2021-22.pdf  என்ற கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலய வலைத்தள இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்: அல்லது 081-2222652ஃ2223789 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அல்லது www.facebook.com/AssistantHighCommissionOfIndiaKandySriLanka/  www.facebook.com/bkkahcikandy/  முகத்தளப் புத்தகத்தினூடாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X