Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 05 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனத் தெரிவிக்கும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார், 20ஆவது திருத்தச்சட்டம் என்பது, சிறுபான்மையினக் கட்சிகளுக்கான மரணப்பொறியெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டு வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையே பயனுடையதாக அமைந்துள்ளதெனவும் இம்முறையை இல்லாதொழிக்க துணைபோகக் கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது மாத்திரமே முழு நாடும் ஒரே தேர்தல் தொகுதியாக மாறுவதாகவும், அதன்போதுதான் சிறுபான்மை மக்களுக்குத் தீர்மானிக்கும் சக்தியாகி தமது தேவைகளை வலியுறுத்த முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினாலேயே சிறுபான்மை மக்கள் பேரம் பேசும் சக்தியாகக் காணப்படுவதாகவும் இம்முறை ஒழிக்கப்பட்டால் தமிழ் பேசும் மக்கள், அரசியல் அநாதைகளாக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்த சரத்துகள் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நீக்கப்பட்டுள்ளதென தெரிவித்த அவர், 20 ஆவது திருத்தச்சட்டமூலமானது சிறுபான்மையின மக்களின் அரசியல் இருப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாகும் என்றார்.
அதனால், ஜனநாயகம் என்ற போர்வையில் அதற்கு சிறுபான்மையினக் கட்சிகள் ஆதரவு வழங்கினால் இறுதியில் அது இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதையாகவே அமைந்துவிடும் எனவும், நிதானமாகக் கையாண்டு தோற்கடிக்க வேண்டும் என்றும் இதனை எதிர்ப்பதால் முற்போக்குக் கூட்டணியினர் ஜனநாய விரோதிகள் என்று முத்திரை குத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago