Editorial / 2017 செப்டெம்பர் 16 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சதீஸ்,மு.இராமச்சந்திரன்
கினிகத்தேனை பகுதியில், 270 ஆபாச இறுவட்டுக்களுடன் மூன்று சந்தேக நபர்கள், நேற்று (15) ஹட்டன் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் குற்றப்புலனாய்வு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆபாச காணொளி இறுவெட்டுக்கள் அனைத்தும், முழுமையாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இறுவட்டும் தலா 200 ரூபாய் என்ற விலையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறான வியாபாரம் நீண்டகாலமாக கினிகத்தேனை பகுதியில் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவரும், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஹட்டன் குற்றப்புலனாய்வு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026