Kogilavani / 2021 மார்ச் 03 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
கினிகத்தேனை பிரதேசத்தில் இதுவரைக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த வீடுகள் இல்லாமல் வசித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கினிகத்தேனைப் பிரதேசத்துக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடம் வினவியபோது, இப்பிரதேசத்தில் தான் 2017ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிவதாகவும் இதுவரை தமக்கான வீட்டை நிர்மாணித்துக் கொள்வதற்காக 400க்கும் அதிகமான குடும்பங்கள் நிலத்தைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேற்படி மக்களின் பிரச்சினை தொடர்பில், பிரதேசச் செயலாளரே நடடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
காணிக் கச்சேரி கூட்டத்தைக் கூட்டும்போதே வீடற்றவர்களுக்கான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில், அம்பகமுவ பிரதேச சபை கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள பிரதேச மக்கள், வீடற்றவர்களுக்குக் காணியை வழங்கும் பட்சத்தில், தமக்கான வீட்டை நிர்மாணித்துக்கொள்ள முடியும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026