Janu / 2024 மார்ச் 21 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாக்கம் நிறைந்த புதுமைகளையும், சாதனைகளையும் கடந்த 04 தசாப்தங்களாக நிகழ்த்தி வரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் அரை நூற்றாண்டு பயணத்தை அண்மித்து தனது 45 வது வருட அகவை தின விழாவை மிக கோலாகலமாக கொண்டாடவுள்ளது.
இந் நிகழ்வு வெள்ளிக்கிழமை (22) ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து திங்கட்கிழமை (25) வரை தினமும் காலை 9.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து நான்கு நாட்கள் இடம்பெற உள்ள அகவை தின சிறப்பு நிகழ்வில் கண்காட்சி , கெளரவிப்பு நிகழ்வுகள், பரிசளிப்பு நிகழ்வுகள், கலை கலாச்சார நிகழ்வுகள், 45 வது ஆண்டு நிறைவு சிறப்பு நூல் வெளியீடு, பல் பொருள் அங்காடி மேலும் பாடசாலை சமூகம் சார்ந்தோரின் நடை பவனி என்பன இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது .
மேலும் இவ் வித்தியாலய வரலாற்றில் தடம் பதிக்கவிருக்கும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க விழா ஏற்பாட்டு குழு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்


6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago