2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

48 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இருவர் கைது

Kogilavani   / 2021 மார்ச் 17 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா, நடராஜா மலர்வேந்தன், ஆர்.புவியரசன்  
 
பசறையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மாட்டிறைச்சி விற்பனை நிலையமொன்றை, பசறைப் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன், 48 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இருவரை கைதுசெய்துள்ளனர்.
 
பசறை நகரை அண்மித்த வீடமைப்புத் தொகுதியின் வீடொன்றிலேயே, மாட்டிறைச்சி நிலையம் இயங்கிவந்துள்ளது. 
 
மாடொன்று வெட்டப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலொன்றையடுத்து, விரைந்துச் சென்ற பொலிஸார் மேற்படி வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர். இதன்போது, இறைச்சி வெட்டப்பட்டுக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 
 
இரு பசுக்கள் வெட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஒரு பசு மட்டுமே வெட்டப்பட்டுள்ளது. உயிருடன் இருந்த பசுவை மீட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X