Janu / 2024 ஜூலை 17 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிபோருவ தோட்டத்திலுள்ள கிணற்றுக்குள் சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தோட்டத்தை சேர்ந்த 5 வயதுடைய தேவ்மினி அமாஷா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
தாய் மற்றும் சிறுமி குறித்த கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாகவும் , இதில் 28 வயதுடைய பி. நிரோஷா என்ற தாய் காப்பாற்றப்பட்டு கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
மேலும், சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

7 minute ago
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026