டி. ஷங்கீதன் / 2020 ஜூன் 16 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட 50 ரூபாய்க்கு ஆப்பு வைத்த நவீன் திஸாநாயக்கவுக்கு தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமையை விமர்சித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், இது, திட்டமிட்டு தொழிலாளர்களைப் பழிவாங்கும் செயற்பாடு என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (16) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வழங்கவிடாது, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர், நவீன் திஸாநாயக்கதான் என்பது, அனைவரும் அறிந்த விடயம் என்றும் தொழிலாளர் நலன்களில் அக்கறை செலுத்தாத ஒருவர், எப்படி தொழிற்சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
நடைபெறவுள்ள தொழிற்சங்க - கம்பனிகள் கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது, இதில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் ஓர் அங்கமாக இருக்கும் நிலையில், ஏற்கெனவே சரியாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத இவர், எவ்வாறு சம்பள உயர்வு பற்றிப் பேசுவார் என்றும் அவர் வினவியுள்ளார்.
28 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
30 minute ago