2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘50 வருடமாக சிரமப்படுகிறோம்’

Gavitha   / 2021 மார்ச் 01 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட, வியான்வெல தோட்ட மக்கள், சுமார் 50 வருடங்களாக புனரமைக்கப்படாமல் உள்ள தங்களது பாதையைப் புனரமைத்துத் தருமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தோட்டத்தில், சுமார் 128 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஹைபோரஸ்ட் நகரத்திலிருந்து இத்தோட்டத்தக்குச் செல்லும் ஐந்து கிலோமீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதை, சுமார் 50 வருடங்களாக, புனரமைக்கப்படாமல் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பாதையில், வாகனங்கள் செல்ல முடியாது என்றும் மழைக்காலங்களில், வீதியிலுள்ள குழிகளில் நீர் தேங்கிக் கிடப்பதாகவும் கர்ப்பிணித் தாய்மார்களும் முதியோர்களும் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காக தங்களது தோட்டத்துக்கு அரசியல்வாதிகள், வாக்குகளை மாத்திரம் கோருவதாகவும் எனினும் தங்களது பிரச்சினைகைளைக் கண்டுகொள்வதில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.

இந்தப் பாதை சீர் இன்மையால், வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே பல நோயாளர்கள் இறந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே,  இந்தப் பாதையை, தங்களிடம் வாக்குகளைப் பெற்ற அரசியல் வாதிகள் புனரமைக்காவிடினும் அதிகாரிகளாவது புனரமைத்துத் தருமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .