2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

57,000 கிலோ கஞ்சா கைப்பற்றி அழிப்பு

Super User   / 2010 நவம்பர் 23 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கட்டுகஸ்தொட்டை பொலிஸார் வெல்லவாய பிரதேசத்தில் எட்டு ஏக்கர் கஞ்சா சேனை ஒன்றினை முற்றிகையிட்டு இரண்டரை கோடி ரூபாய் பெருமதியுள்ள 57,000 கிலோ கஞ்சாவை நேற்று திங்கட்கிழமை கைப்பற்றி அழித்துள்ளனர்.

இலங்கையில் இது வரை ஒரே நேரத்தில் கஞ்சா அழிக்கப்பட்ட மிகப் பெரிய தொகை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் ஒரு வாரத்துக்கு முன் 2500 மில்லி கிராம் கஞ்சாவுடன்  கைது செய்யப்பட்டவரிடம் பெற்ற தகவலையடுத்து நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் தொடராக விசாரணை மேற்கொண்சதன் அடிப்படையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லவாயப் பிரதேசத்துக்கு சென்று இக்கஞ்சா தொகையினை அழித்துள்ளனர்.

வெல்லவாய பிரதேசத்தில் மிகவும்  பிந்தங்கிய  காட்டு பிரதேசமொன்றில்  இச்சேனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று தினங்கள் இரவு பகலாக விழித்திருந்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை கஞ்சா சேனையை அழிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய மாகானத்துக்கு பொருப்பான சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அரிபர் காமினி நவரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயன்த கம்மன்பில ஆகியோரின் மேற்பார்வையில் பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்க தலமையிலான பொலிஸ் குழுவே இந்நடவடிக்கையில் ஈடுபட்டது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .