Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மு. இராமச்சந்திரன்
பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 65 கிலோகிராம் மாவா போதைபொருள் (புகையிலைத் தூள்), தலவாக்கலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள மாவா போதைப் பொருளை, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விற்பனை செய்ய வைத்திருந்த நிலையில், தலவாக்கலை நகர வர்த்தக நிலையமொன்றிலிருந்து, இன்று (30) பிற்பகல் கைப்பற்றப்பட்டது.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தலவாக்கலை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ரசிக்க வத்தேகம தெரிவித்தார்
மாவா போன்ற போதைப்பொருள் பாவனையால் புற்றுநோய் ஏற்படுகின்ற நிலையில், மலையகத்தின் பல பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, இது விற்பனை செய்யப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, நுவரெயா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .