2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

7 வயது சிறுமியை காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தியாகு

நுவரெலியா, மாகாஸ்தோட்ட கீழ் பிரிவில், 7 வயது சிறுமியொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோரினால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு   செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தோட்ட பிரிவைச் சேர்ந்த சதாசிவம் ஞானதேவி தம்பதிகளின் மகளான நிவேதா  என்ற சிறுமியே  இவ்வாறு நேற்று மாலை 3.00 மணிமுதல் காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று மாலை பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்பு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .