Gavitha / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்நாட்டில் உள்ள எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்பதே உண்மையாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டி. நுகவல பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த 73 வருடங்களில், இலங்கை எதையும் சாதிக்கவில்லை என்றும் எனவே, 77ஆவது வருடத்தில், புதுயுகம் படைக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக ஆட்சிக்கு வந்த அனைவரும், தமது தோல்வியான ஆட்சியையே நிரூபித்துள்ளனர் என்றும் மாயாஜாலம் காண்பிக்க வந்தவர்களால், நாடும் நாட்டு மக்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்களை, கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பதற்கு, குறைந்தது 70 சதவீமானவர்களுக்காவது தடுப்பூசி வழங்கவேண்டும் என்றும் அப்படியாயின், 150 இலட்சம் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்குப் பணமில்லை என்று கூறியவர்கள், சீனி வியாபாரத்தில் மில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதித்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
49 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago