2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

75 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

Kogilavani   / 2017 ஜூன் 30 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஹம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 75 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது

இதற்கமைவாக, ஹட்டன்   லெதண்டித் தோட்டத்தில் 15 வீடுகளுக்கும், ஹட்டன் தொப்பி தோட்டத்தில் 20 வீடுகளுக்கும் பொகந்தலாவை கெம்பியன் தோட்டத்தில் 40 வீடுகளுக்குமான அடிக்கல் நாட்டப்பட்டது. 

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சே.ஸ்ரீதரன், சிங்பொன்னையா, எம்.ராம், மலையக மக்கள் முன்னனியின் பொதுச்செயலாளர் அ.லோரன்ஸ்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .