Gavitha / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், எஸ். கணேசன்
கொழும்பிலிருந்து பொகவந்தலாவைக்கு கொண்டுச் செல்லப்பட்ட பெருமளவான, புகையிலைதூள் அடைக்கப்பட்ட (SVS) டப்பிகள், நேற்று திங்கட்கிழமை இரவு கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை நோக்கிச் சென்ற பயணிகள் பஸ்ஸில், நபரொருவர் புகையிலைதூள் அடைக்கப்பட்ட (SVS) டப்பிகளை கொண்டுச் செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்தனர்.
18 கிலோ 250 கிராம் நிறைடைய டப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை பஸ்ஸிலிருந்து இறக்கி வியாபார நிலையத்துக்கு கொண்டுச் செல்லும் போது கைப்பற்றியதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரான குறித்த வர்ததகரை ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09)ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago