2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

அசிட் வீச்சில் ஐவருக்கு எரிகாயம்

Editorial   / 2024 மார்ச் 06 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழக்கு விசாரணைக்காக வந்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் புதன்கிழமை (06) காலை இடம்பெற்ற அசிட் வீச்சினால் ஐவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

வழக்கு ஒன்றுக்காக வந்த ஒருவர், வீதியில் பயணித்த அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரியின் புதிய நகரத்தில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பிரதான பிரதிவாதியை இலக்கு வைத்தே  அசிட் வீச்சு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கார் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தந்தையே  அசிட் வீச்சை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .