Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Gavitha / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட, பிரவுண்சிக்- குயின்ஸ்லேன்ட் தோட்டப் பகுதியில், கடந்த 2018ஆம் ஆண்டு 40 வீடுகளைக் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும், இதுவரை வீடுகள் கட்டப்படவில்லை என, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜால் இந்த அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது என்றும் குறித்தத் தோட்டத்தில் வீடுகள் இல்லாமல், தற்காலிகக் கூடாரங்களில் வசிப்போருக்கே இந்த வீடுகள் வழங்கப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான ஆரமபக்கட்டப் பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள், மலையகத் தலைவர்கள், மலையக மக்களின் பிரச்சினைகளை பாராபட்சமான முறையிலேயே பார்க்கின்றனர் என்றும் தலைவராக இருக்கும் ஒருவர், இவ்வாறு பாராபட்சம் பார்ப்பது கவலையளிப்பதாகவும் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில், தீயால் சேதமடைந்த லயன் அறைகள் கூட, இன்னும் புனரமைக்கப்படாமல் இருப்பதாகவும் தனிவீட்டுத் திட்டத்துக்காக அடிக்கல் நாட்டப்பட்டும், வீடமைப்புப் பணிகள் இன்னும் முன்னெடுக்கப்படாமல் உள்ளது என்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
38 minute ago
2 hours ago
3 hours ago