Editorial / 2020 மே 18 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
வட்டவளை பிரதேசத்தின் கரோலினா தோட்ட பகுதியின் ஆற்றில் அமைக்கப்பட்ட அணைக்கட்டால், வட்டவளை நகரத்தைச் சுற்றி வாழும் சுமார் 250 வரையான குடும்பங்கள் தமக்கு எந்நேரத்திலாவது வெள்ளபெருக்கினால் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.
வட்டவளை நகரத்தைச் சுற்றியுள்ள ஆற்றின் இருமருங்கிலும் சுமார் 250 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் வருடம்தோறும் ஏற்படும் வெள்ளபெருக்கு காரணமாக, அயலவர்கள் வீடுகளிலும் கோயிலிலும், பாடசாலைகளிலும் தஞ்சமடைவது வழமையான செயற்பாடாக இருப்பதாக, மக்கள் தெரிவித்தனர்.
அவ்வாறு இப்பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் ஆற்றின் இருபக்கத்திலும் குடியிருப்புகள், கோயில்கள், வைத்தியசாலை, வியாபார ஸ்தாபனங்கள் காணப்படுகின்றன.
இப்பிரதேத்தின் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு சுமார் 12 அடி உயரம் கொண்ட அணைக்கட்டாக இருப்பதால், தாம் தொடர்ந்து வெள்ளபெருக்குக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அணைக்கட்டின் உயரத்தைக் குறைத்துத் தருவதாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை தெரிவித்து வந்தாலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் ஆற்றை அகலப்படுத்தினாலும், தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக, ஆற்றில் மண் நிறைந்தும் விடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
13 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
58 minute ago
3 hours ago