Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தற்போது கூடிய இலாபத்தினை பெற்று வருகிறது என்று சப்ரகமுவ மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரம்மியகுமார வீரசிங்க தெரிவித்தார்.
இரத்தினபுரி புதிய நகரில் நேற்று முன்தினம் (29) நடை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சப்ரகமுவ மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் தனியார் பஸ் வண்டிகளில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளை இனங்கண்டு, பயணிகளிடம் அது குறித்து கேட்டறிந்து, முறையான சட்டத்தை முன் வைத்து பயணிகளுக்கு சிறந்த சேவையை பெற்று கொடுப்பதாகவும் இதன் காரணமாக சப்ரகமுவ மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை கூடிய இலாபத்தை பெற்று வருகின்றது.
கடந்த காலங்களில் சப்ரகமுவ மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் ஏற்பட்ட ஊழல் மோசடி காரணமாக, மாதமொன்றுக்கு 70 இலட்சம் நட்டம் ஏற்பட்டு வந்தது. இதனால் அலுவலக சேவையாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவு கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது அவை அனைத்தும் தீர்க்கப்பட்டு அலுவலக சேவையாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவு என்பன முறையாக வழங்கப்பட்டு வருவதுடன், மாதமொன்றுக்கு 47 இலட்சம் ரூபாய் இலாபத்தையும் பெற முடிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago