2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

அதிக விலைக்கு பொருள்கள் விற்பனை; தோட்ட மக்கள் நிர்க்கதி

Kogilavani   / 2021 மார்ச் 16 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.பாயிஸ்

பெருந்தோட்டங்களிலுள்ள வியாபார நிலையங்களில், பொருட்கள் அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்படுவதால், மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட தோட்டப் பகுதி வியாபார நிலையங்களில், பரவலாக இந்நிலைமை காணப்படுவதாகவும் இதனால், தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உட்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நகரங்களில் இருந்து தொகை விலைக்குப் பொருள்களை எடுத்துச் செல்லும் வியாபாரிகள், அவற்றைப் பல மடங்கு இலாபம் வைத்து விற்பனை செய்வதால், தொழிலாளர்கள் அவற்றை வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தொழிலாளர்களின் மாதச் சம்பளம் கிடைத்ததும் வழங்குவதாகப் பொருள்களைத் தொழிலாளர்கள் கடனுக்கு வாங்குவதாலேயே, வியாபாரிகள் இவ்வாறு அதிகரித்த விலைகளில் பொருள்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அதனையும்விட அதிக விலையில் பொருள்கள் விற்கப்படுவதால், தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

பெருந்தோட்டங்களுக்கு, நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் திக் விஜயம் மேற்கொண்டு, வியாபார நிலையங்களில் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்று, பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X