Editorial / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு, மாத்தளை மாவட்டம் தயாராகவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை, முன்கூட்டியே மேற்கொண்டுள்ளதாகவும், மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் சமிந்தர அமரவீர தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில், அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பிரதேசங்கள் குறித்து அவதானமாகவுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்காக குழுக்களைத் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் இந்தக் குழுவினர், அவசர நிலைமைகளின் போது, களத்தில் இறங்கிப் பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, வெள்ள அபாயத்தை எதிர்கொள்வதற்காக, பிரதேச செயலக ரீதியில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவசர அனர்த்த சேவைகளை வழங்குவதற்கு, பிரதேச செயலகங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026