2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மாடுகளைக் கொண்டுச்சென்ற நால்வர் கைது

Kogilavani   / 2021 மார்ச் 25 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

அனுமதிப்பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிச்சென்ற நால்வரை, கினிகத்தேனை பொலிஸார் நேற்று (25) காலை கைதுசெய்துள்ளனர்.

ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டிக்குப் பயணித்த சிறிய ரக லொறியை, தியகல பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து வழிமறித்த பொலிஸார், லொறியை சோதனையிட்டபோதே, அதில் மாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி மேற்படி மாடுகள் கொண்டுச்செல்லப்பட்டுள்ளன என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X