Kogilavani / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
2015ஆம் ஆண்டு, அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றவர்;களது கொடுப்பணவில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், அதனை நிவர்;த்திக்க உரிய தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 2015ஆம் ஆண்டு முதல் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்;களது ஒன்றியத்தின் தலைவர் சீ.பீ.ஜே.கே.என்.யட்டவர, கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்காக, 2015ஆம் ஆண்டு முதல் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களது ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், இந்நிறுவனம் பேராதனை, கண்ணொருவ வீதி, இல-2-4-பீ-4-1 என்ற முகவரியில் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
'2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி, பொது நிர்;வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிரூபத்தின்படி, அரச ஊழியர்களது சம்பள மீளாய்வு 3.1.2016 முதல் அமுலாக்கப்பட்டுள்ளது. இதனால், 2015ஆம் ஆண்டு ஓய்வுபெற்றவர்;கள் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே, 2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் அரச துறையிலிருந்து ஓய்வுபெற்ற சகலரும், எமது அமைப்புடன் இணைந்து இவ்விடயத்துக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்' என்றார்.
இதன்படி சுற்றுநிரூபம் 3.1.2016இல் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளைப் பெற்றுக்கொள்ள '2015ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற அரச ஊழியர்;களது ஒன்றியம்' என்ற பெயரில் தாம் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அதில் 2015 ஜனவரி முதல் 2015 டிசெம்பர்; வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற சகல அரச ஊழியர்களும் இணைந்துக் கொள்ளும்படியும் அவர் கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பிலான மேலதி தகவல்களைப் பெற விரும்புவர்கள், 071 8011275, 077 5948 785, 077 6709690, 072 8133692 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
18 minute ago
30 minute ago
48 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
30 minute ago
48 minute ago
58 minute ago