Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 11 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
யட்டியாந்தோட்டை தேர்தல் தொகுதியில் மிகவும் பின்தங்கிய அமனாவல கிராமிய வைத்தியசாலைக்கு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
தற்போது குறித்த வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர்களும் தாதி ஒருவரும், பணியாளர் அலுவலகத்தில் நால்வரும் கடமையாற்றுகின்றனர்.
ஒரே நேரத்தில் 10 நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெறுவதற்கான வசதிகள் இந்த வைத்தியசாலையில் காணப்பட்டாலும் வைத்தியர்களுக்கான உத்தியோகப்பூர்வ வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில் வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பகடுவ வைத்தியரின் உத்தியோகப்பூர்வ வீட்டை விரைவாக புனரமைத்து, வைத்தியரை நிரந்தரமாக குறித்த வைத்தியசாலையில் 24 மணிநேரம் சேவையில் இணைப்பதற்கும் தாதியர் இருவர் மற்றும் பணிப்பாளர் சபைக்கு மேலும் இருவரை நியமிக்குமாறும் கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago