Sudharshini / 2016 ஜனவரி 02 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் 6ஆவது சிரார்த்த தினம், நேற்று பிற்பகல் 2 மணிக்கு, ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் இராஜாங்க கல்வி அமைச்சருமான வி.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழவில், ஆரம்ப உரையை ம.ம.மு.வின் செயலாளர் நாயகம் அ.லோறன்ஸும் சிறப்புரையை நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் ஆற்றினர்.
ஞாபகார்த்த உரையை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நிகழ்த்தினார்.
மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவருமான ஆர்.ராஜாராம், ஹட்டன் நகர சபையின் முன்னாள் தலைவர் நந்தகுமார் உட்பட ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago