Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
அம்பகமுவ பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், இன்று (02) 12 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் பிரகாரம், கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளக்வோட்டர் பகுதியில் 5 தொற்றாளர்களும் மில்லகாமுல்ல பகுதியில் ஒரு தொற்றாளரும், நோட்டன் பிரிட்ஜ் கிரிலெநெலிய பகுதியில் 2 தொற்றாளர்களும், தண்கலையில் 3 தொற்றாளர்களும், மஸ்கெலியா சாமிமலை பகுதியில் ஒரு தொற்றாளரும் என, மொத்தம் 12 தொற்றாளர்கள உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 12 தொற்றாளர்களும் கொழும்பில் இருந்து வந்துள்ளனர் என்றும் இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago