2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

அயோனா தோட்டத்தில் படம் எடுத்து ஆடும் நாப்பாம்பு

Editorial   / 2026 ஏப்ரல் 17 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அயோனா தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்யும் தேயிலை மலைப் பகுதியில், சுமார் 6 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியில் இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய நாகப்பாம்புகள் தென்பட்டதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், கடந்த இரண்டு மாதங்களாகத் தேயிலை மலைப் பகுதியில் நாகப்பாம்பு நடமாட்டம் இருப்பதாகத் தொழிலாளர்கள் அச்சம் வெளியிட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அது பிடிபட்டுள்ளது. நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நிபுணர் ஒருவரின் உதவியுடன் குறித்த பாம்பு பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டது. பின்னர் அதனை வனப்பகுதியில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. துவார்ஷான்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .