Kogilavani / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம்
புதிய அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தத்தில், மலையக மக்களுடைய தேவைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்மிரருக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
'நீண்டகால இடைவெளிக்குப் பின்னர், இந்நாட்டின் அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது சிறுபான்மை மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பாகுமென அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறாயின், இந்நாட்டில் அடிப்படை உரிமைகளின்றி வாழ்ந்து வருகின்ற மலையக மக்களுடைய அனைத்து தேவைகளும் இத்திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும். மலையக மக்களின் அரசியல் உரிமைகளும் அரசியல் அமைப்பு திருத்தத்தில் உள்வாங்கப்பட்டு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி மேம்பாடு போன்ற சகல வழிவகைகளும் முன்மொழியப்பட வேண்டும். இந்நாட்டில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களைப் போல நில உடமையாளர்களாக மலையக சமூகத்தை மாற்றியமைப்பதற்கான உத்தரவாதமும் இந்த புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்' என அவர் கோரினார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago